முதல் முத்தம் கொடுக்க பயிற்சி எடுத்த கங்கனா..

by Chandru, Oct 10, 2019, 17:32 PM IST

தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் குயின். த்னு வெட்ஸ் மனு மணிகர்ணிகா போன்ற படங்களில் நடித்துள்ளார், தற்போது ஜெயல்லிதா வாழ்க்கை சரித்திர பட த்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.

சமீபகாலமாக சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் கங்கனா. குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டும், பாதுகாப்பான செக்ஸ் இளைஞர்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது முதன்முறையாக தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் குறித்து கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார். அவர் கூறியது:

எனது தோழி ஒரு பையனை விரும்பினாள். அவனுடைய நண்பனும் நானும் அவர்களுக் காக காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பனை காதலிப்பதாக சொன்னேன். அவனோ என்னை பார்த்து, நீ ரொம்ப சின்ன பொண்ணு என்றான். எனக்கு இதயமே வெடித்த மாதிரி ஆகி விட்டது. நான் வளர்ந்த பிறகு வருகிறேன் என்றேன்.

அடிக்கடி செல்போனில் இருவரும் தகவலும் அனுப்பி னோம். அதன்பிறகு இருவரும் சில நாட்கள் சுற்றி விட்டு பிரிந்து விட்டோம். எனக்கு முத்தம் கொடுப்பது எப்படி என்பது சரியாக தெரியவில்லை. அவனுக்கு முத்தம் கொடுப்ப தற்காக எனது உள்ளங்கையில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்தேன், பிறகு முதல் முத்தம் தந்தபோது நான் உறைந்துபோய்விட் டேன். அது எனக்கு எந்தவொரு மேஜிக்கையோ, மயக்கத்தையோ தரவில்லை, அது ரொம்பவும் அசவுகரியமாக இருந்தது' என்றார்.


Leave a reply