எஸ்.ஜே.சூர்யா-பவானி ஷூட்டிங் தொடங்கியது..

by Chandru, Oct 12, 2019, 17:27 PM IST

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இவர் அபியும் நானும், மொழி, காற்றின் மொழி போன்ற படங்களை இயக்கியவர். ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார். மான்ஸ்டர் படத்தில் நடித்ததிற்கு பிறகு மீண்டும் பிரியா பவானி சங்கர் எஸ்.ஜே.சூர்யா வுடன் இணைந்து நடிக்கிறார் சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.

அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படம் முற்றிலும் புதிய பாணி காதல் கதையாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.


More Cinema News