அனுஷ்கா படத்தில் பார்வையற்ற இசை கலைஞராக மாதவன்..

by Chandru, Oct 12, 2019, 17:41 PM IST

பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு பல மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் நடிக்கும் புதிபடம் நிசப்தம். இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கிறார். இதில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சுந்தர்.சி.இயக்கத்தில் ரெண்டு படத்தில் இணைந்து நடித்த மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த நிசப்தம் படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத, காது கேளாத ஓவியம் வரையும் பெண்ணாக நடிக்கிறார் கண் பார்வையற்ற இசை கலைஞராகவும் நடிக்கிறார் மாதவன்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்கும் இந்த படம் வசனங்கள் இல்லாமல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.


More Cinema News