நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..

by Chandru, Oct 12, 2019, 18:45 PM IST

நடிகர் விஷாலுக்கும் தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த மார்ச் 18 ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் அனிஷா ரெட்டியின் சமூக வலைதள பதிவால் அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது . சில நாட்களுக்கு பின் அனிஷா இதை வதந்தி என மறுத்தார்.

இந்நிலையில், தமயந்தி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷாலின் திருமணம் குறித்து விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேசினார். அவர் பேசுகையில், விஷால் தன் திருமணத்தை நடிகர் சங்க மண்டபத்தில் தான் நடத்துவேன் என உறுதியளித்துள்ளார். அதிலும் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் உத்தரவளித்தால் விஷால் அணி ஜெயித்து விடும் . அதன் பிறகு நடிகர் சங்க கட்டிட வேலைகளை விஷால் அணி விரைவாக முடிக்கும். அவர் முன்பு சொன்னது போல அவரின் திருமணம் அங்குதான் நடைபெறும். விஷால் அனிஷா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.


More Cinema News