ரஜினி நடித்துள்ள தர்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
இது ரஜினியின் 168வது படமாகும். சிவா இயக்குகிறார். சிறுத்தையில் துவங்கி அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 5 படங்களை இயக்கியுள்ளார் சிவா. கிராமத்து பின்னணியில் ரஜினிக்கு, சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிட படத்தை உடனடியாக தொடங்கப்படுகிறது. ரஜினி நடித்த எந்திரன், பேட்ட படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டது.
அஜீத்தை வைத்து சிவா ஏற்கனவே இயக்கிய வீரம், விஸ்வாசம் கதைகள் கிராமத்து பின்னணியில் இருந்ததால் அதே பாணியில் ரஜினிக்கும் கதை சொல்லியிருக்கிறார். கிராமத்து பின்னணியிலான கதையில் ரஜினி நடித்து வெகுகாலமாகிவிட்டதால் ரஜினிக்கும் கிராமத்து பின்னிணி கதையில் மீண்டும் நடிக்க ஆசை வந்தது.
ஆர்.வி.உதயகுமார் இயக்கிய எஜமான் படத்தில் வேட்டி சட்டையில் ரஜினி நடித்திருந்தார். அதன்பிறகு 26 வருடங்களுக்கு பின் ரஜினி மீண்டும் வேட்டி, சட்டை அணிந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. வேட்டி வேட்டி வேட்டி கட்டு என்று விஸ்வாசம் படத்தல் வேட்டி கட்டிக்கொண்டு அஜீத் நடனம் ஆடியதுபோல் தனது 168 படத்தில் வேட்டியுடன் ரஜினியின் ஸ்டைல் ஆட்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி எஜமான் படத்தில் படம் முழுக்க வேட்டி கட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்சியல் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி பற்றிய தகவல் கசிவதால் இப்படம் கிராமத்து பின்னணியில் இருக்கும் வகையில் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.