விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..

by Chandru, Oct 15, 2019, 16:13 PM IST

கார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது. ரசிகர்களும் பட்டாசும் கையுமாக வெடித்து தூள்கிளப் காத்துக்கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. கைதி படப்பிடிப்பு முழுவதும் இரவில் நடந்திருக்கிறது.

இதில் ஹீரோயின் கிடையாது. 10 வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவரும் கைதியாக கார்த்தி நடித்திருக்கிறார். இப்படத்திற்காக லாரி ஓட்டும் பயிற்சி பெற்று படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் லாரி ஓட்டி நடித்திருக்கிறார். தந்தை மகளுக்குமான பாசத்தை மையமாக கொண்ட கதையுடன் போதை மருந்து பின்னணியிலான ஆக்‌ஷன் அதிரடிகளும் கதைக்களமாக்கப்பட்டிருக்கிறதாம். சித்திரம் பேசுதடி நரேன் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாக ரமணாவும் நடித்திருக்கின்றனர்.

விஜய்யின் பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்ட கோச்சாக விஜய் நடித்திருப்பதுடன் தாதாவாகவும் மற்றொர கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.

ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை சமந்தா இப்பட டிரெய்லரை பார்த்து விஜய், இயக்குனர் அட்லியை பாராட்டியிருக்கும் நிலையில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரஸல் அர்னால்ட் தன வலைதளப் பக்கத்தில், 'பிகில்' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்து ரசித்தேன்.

விஜய்யின் ராயப்பன் கேரக்டர அந்தர் மாஸ் ஆக இருக்கிறது. இப்படம் ரிலீசாகும் வார இறுதி நாட்களில் எனக்கு 2 டிக்கெட்டுகள் கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார்.


Speed News

 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST