தளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...

கால்பந்தாட்ட பயிற்சியாளர், தாதா என இரண்டு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் பிகில். நயன்தாரா ஹீரோயின். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அட்லி இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் இணைய தளத்தில் பெரிய வரவேற்பு பெற்றது.

படம் ரிலீஸ் தேதி தணிக்கை சான்று போன்றவற்றிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தணிக்கையில் இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் தரப்பட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று பட நிறுவனம் அறிவித்திருந்தது.

தீபாவளி வரும் 27ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது. வழக்கமாக புதிய படங்கள் வெள்ளிக் கிழமைகளில் ரிலீஸ் செய்யப்படுவதால் இப்படம் வெள்ளிக்கிழமை வருமா, ஞாயிற்றுகிழமை வெளியாகுமா என்ற குழப்பம் இருந்துவந்தது. அந்த குழப்பத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி போக்கியிருக்கிறார். 'உலகம் முழுவதும் பிகில் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது' என குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே பிகில் ரிலீஸ் ஆகிறது.

அதேபோல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் பற்றியும் தகவல் வெளியாகியிருந்தது. இப்படத்தை மாநகரம் பட இயக்குனரும், விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்குபவருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
கைதி படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படமும் பிகில் வெளியாகும் அதேநாளில் அதாவது தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக 25ம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

பிகில், கைதி தீபாவளியையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்னதாக 25ம்தேதி திரைக்கு வருவதுடன் வேறு புதிய படம் எதுவும் போட்டிக்கு இல்லாததால் இரண்டு படங்களில் வசூலை அள்ளிக் குவிக்கப்போவது எந்த படம் என்பதை விநியோகஸ்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :