விஜய் பந்தாடப் போகும் வில்லன்கள் எத்தனைபேர் தெரியுமா? அர்ச்சனா அக்கா வெளியிட்ட சீக்ரெட்..

Advertisement

தெறி, மெர்ச்லை தொடர்ந்து விஜய் - அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் பிகில் . தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே அதாவது 25ம் தேதியே படம் ரிலீசாவதால் விஜய் ரசிகர்கள் பட்டாசு சரவெடியுடன் காத்திருக்கின்றனர்
சுமார் ரூ.180 கோடியில் உருவாகியுள்ள பிகில் படத்தை தயாரித்திருப்பது ஏஜிஎஸ் நிறுவனம். இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி.

இவர் ரசிகர்களுக்களுக்கு அடிக்கடி பிகில் படத்தின் அப்டேடை நெட்டில் கொடுத்து அவர்கள் மனதில் அக்கா என்று இடம் பிடித்திருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் அக்கா (#Akka) என ஹேஷ்டேக் போட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அத்துடன் படமும் ரிலீசுக்கு முன்பே 200 கோடி விற்பனை தொட்டிருப்பதால் படுகுஷியில் இருக்கிறார். அர்ச்சனா.

பிகில் படம் குறித்து அர்ச்சனா கல்பாதி பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார். . பிகில் படத்தில் விஜய்க்கு எத்தனை வில்லன்கள் என்ற ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிகில் ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிச்சிருக்கோம்.

குடும்பத்தினர், யூத். குட்டீஸ் என அனைவரைக்கும் பிடிக்கும். ஒவ்வொரு பிரேமிலும் விஜய் சாருக்கு விசில் பறக்கும். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக படமென்பதால் இக்காட்சிகளை வெளிநாட்டில் உள்ள ஸ்பெஷல் டெக்னிஷியன்களை கொண்டு காட்சிகளை கலக்கலாக் படமாக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் சில போர்ஷன்ஸ் ஷூட் பண்ணிருக்கோம். படத்துக்கு புட்பால் தெரிஞ்ச கோரியோகிராப்பர்ஸ் தேவைபட்டாங்க. ஏமி மெக் டேனியல், ஜஸ்டின் ஸ்கின்னர்னு ரெண்டு பேர் இதில் மிரட்டியிருபார்கள் .

கிளைமாக்ஸ் காட்சியை மிகப் பெரிய புட்பால் மைதானத்தில் ஷூட் செய்ய வேண்டியிருந்தது. இந்தியா முழுவதும் அலைஞ்சு பார்த்தோம். ஆனா எதுவும் செட்டாகவில்லை . கடைசியில் செட் போட்டு ஷூட் செய்தோம். முதல்ல ரூ. 125 கோடி தான் பட்ஜெட் போட்டோம். ஆனால் அது ரூ.55 கோடி அதிகமாகிடுச்சு.

படத்தில் ஆறு நிஜ புட்பால் பிளேயர்கள் மற்றும் ஆறு நடிகர்கள் நடிச்சிருக்கிறார்கள். கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்பட மாற்றும் பலர் உள்ளனர். படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள். அதில் ஜாக்கி ஷெராஃப்பும் ஒருவர். பிகில் நன்றாக வந்திருப்பதில் விஜய் மகிழ்ச்சியாக உள்ளார். இயக்குனர் அட்லியின் கடுனையான் உஅழைப்பு பாராட்டுக்கு உரியது.

இவ்வாறு அர்ச்சனா கல்பாதி கூறி உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>