தல60க்கு ஜோடி போட வரும் தீவிர தல ரசிகை... நஸ்ரியா, ஜான்வி பெயர் அடிபடுகிறது...

Ajiths Thala 60 is now Valimai, filming to begin in December

by Chandru, Oct 20, 2019, 18:44 PM IST

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து அஜித் நடிக்கும் 60வது படம்'வலிமை' நேர் கொண்ட பார்வை இயக்கிய எச்.வினோத் மீண்டும் இப்படத்தைஇயக்குகிறார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அஜீத் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக கதாநாயகி தேர்வு நடக்க உள்ளது. நயன்தாரா, தமன்னா, காஜல் போன்றவர்களுடன் நஸ்ரியா பெயரும் பரிசீலனையில் உள்ளது. நஸ்ரியா தீவிர தல ரசிகை அஜீத்தின் ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் அதை பூஸ்ட் செய்யும்விதமாக தனது இணையதள பக்கத்தில் அப்படத்தினைபற்றிய தகவல்களை தெறிக்கவிடுவார்.

இதுகுறித்து நஸ்ரியா, 'வலிமை' இந்த நாளில் ஒரு புதிய தகவல் கிடைக்கும்' என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் 'வலிமை' படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னணியாக வலம் வந்த நிலையில் நஸ்ரியா திருமணம் செய்துகொண்டார். இப்படம் அவருக்கு பெரிய ரீ என்ட்ரியாக இருக்கும்.

இதற்கிடையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பெயரும் கதாநாயகி பட்டியலில் அடிபடுகிறது.

You'r reading தல60க்கு ஜோடி போட வரும் தீவிர தல ரசிகை... நஸ்ரியா, ஜான்வி பெயர் அடிபடுகிறது... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை