ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்... அடுத்த படத்துக்கு ரெடியாகிறார்...

by Chandru, Oct 29, 2019, 19:58 PM IST
Share Tweet Whatsapp

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் தினங்களில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும்போது ரசிகர்களை சூப்பர் ஸ்டார் ரஜினி சந்திப்பது வழக்கம். இம்முறை தீபாவளி தினத்தில் ரஜினியை சந்திக்க காலை முதலே சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்.

பின்னர் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியில் வந்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன் ரசிகர்களுக்கு மத்தியில் சென்று அவர்களிடம் கைகுலுக்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு வரும டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என்று தெரிகிறது.

சிவா படத்தில் நடிக்கும் வேடம் பற்றிய குணதிசயங்களை ரஜினி கேட்டுவருவதுடன் அந்த பாத்திரத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
 
முன்னதாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து கொடுத்துவிட்டு இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினி, அங்கு ஆன்மிகவாதிகளை சந்தித்ததுடன், சாதுக்களை சந்தித்து ஆசிபெற்று சில தினங்களுக்கு பின்னர் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a reply