ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜீத் ஞாபகார்த்தமாக தத்து குழந்தை... தாய்க்கு, ராகாவா லாரன்ஸ் ஆறுதல்...

by Chandru, Oct 29, 2019, 19:42 PM IST

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் கூறியதாவது:

ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்திய டையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று ராகவா லாரன்ஸ் பிறந்த நாள், சுஜித் மறைவு காரணமாக தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Tiruchirappalli News

அதிகம் படித்தவை