ராஜ்கிரணுடன் மீண்டும் இணைந்த மீனா...இருமொழி படத்தில் மமூட்டியும் கைகோர்பு..

திரைப்படங்களில் ஒரு சில ஜோடிகள் நிரந்தரமாக ரசிகர்கள் மனங்களில் பதிந்துவிடுகின்றன. அப்படி பதிந்த ஜோடிகளில் ராஜ்கிரண், மீனாவும் ஒன்று. மாயாண்டி, சோலையம்மாக நடிக்க 1991ம் ஆண்டு திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்த ராஜ்கிரண், மீனா அடுத்து பாசமுள்ளபாண்டியரே படத்தில் இணைந்தனர்.
அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு குபேரன் படத்தில் இணைந்திருக்கின்றனர். தமிழ், மலையாளம் இருமொழியில் உருவாகும் இப்படத்தில் மம்மூட்டியும் இணைகிறார். . இவர்களுடன் கலாபவன் ஷாவன், ஜான் விஜய், அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, சித்திக் ஆகியோரும் இதில் நடிகின்றனர். அஜய் வாசுதேவ் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது,'மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா குபேரன் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கம்படி இருக்கும். பிபின் மோகன், அனீஸ் ஹமீது கதை எழுதுகின்றனர். ராஜ்கிரண் வசனம் எழுதுவதுடன் முதன்முறையாக பாடலும் எழுதி உள்ளார். கவிஞர் விவேகாவும் பாடல் எழுதுகிறார். கோபிசுந்தர் இசை, ரணதீவ் ஒளிப்பதிவு, ஜோபி ஜார்ஜ் தயாரிக்கிறார். டிசம்பரில் படம் ரிலீஸ்' என்றார் இயக்குனர் அஜய் வாசுதேவ்.
குபேரன் படத்தின் தமிழ்நாடு உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds