கற்பனை திருமணத்தில் மிதக்கும் மணிரத்னம் நடிகை.. இரவு முழுவதும் கடற்கரையில் நடனம் ஆடவேண்டுமாம்..

by Chandru, Nov 14, 2019, 16:12 PM IST
சிருங்காரம் படம் மூலம் தமிழில் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகமானவர் அதிதிராவ் ஹைத்ரி. அதன்பிறகு 9 வருடம் தமிழ் பக்கம் அவரை யாரும் கூப்பிடவில்லை. 2017ம் ஆண்டு மணிரத்னத்திடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. நம்ப முடியாமல் வந்தவர் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்தார். மீண்டும் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். தற்போது துக்ளக் தர்பார் என்ற ஒரேயொரு படம் மட்டும் அவர் கைவசம் உள்ளது.
அதிதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்றுவிட்டார். தற்போது சிங்கிள்தான், ஆனால் 2 வது திருமணத்துக்கு அவர் மறுப்பேதும் சொல்லவில்லை. மும்பையில் மணப்பெண் இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தனது திருமண ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த கற்பனை சினிமாவில்தான் நடக்கும் என்பதுபோல் இருந்தது.
அதிதி வெளியிட்ட திருமண ஆசை இதுதான்....
திருமணம் என்றதும் எனது அம்மாவின் தோற்றம்தான் என் கண்முன் வந்து நிற்கும். திருமண தினத்தன்று அவர் எளிமையாகவே இருந்தார். கண்ணில் லோசாக மை, மஸ்காரா தடவி இருந்ததுடன், பாரம்பரிய சேலை உடுத்தி, பாரம்பரிய நகை அணிந்து, அப்பா வித்தனமாக ஆனால் புத்துணர்ச்சியுடன் இருந்தார். அதுதான் எனக்கு பிடிக்கும். எனது திருமண நாளிலும் அப்படித்தான் இருக்க அசைப்படுகிறேன்.
எனது தோற்றம் ரவிவர் மாவின் ஓவியம் போல் இருக்கவேண்டும். அவரது ஓவியம் எப்படி பாரம்பரியத்துடன் வண்ண மயமாக இருக்குமோ அதுபோல் நான் இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் திருமணம் நடக்கும் இடம்தான் யாரும் எதிர்பார்க்காத இடமாக இருக்கும்.
பாரம்பரியமிக்க கடற்கரை பகுதியில் திருமணம் நடக்க வேண்டும். திருமண வேலைகள் முடிந்தபிறகு கடற்கரைபகுதிக்கு ஓடிச் சென்று விடிய விடிய நடனம் ஆடி மகிழ வேண்டும்.
இவ்வாறு அதிதி தனது திருமணம்பற்றி கற்பனை குதிரைய தட்டிவிட்டார்.
இது நடத்த முடியாத கற்பனை அல்ல ஆனால் சினிமா என்றால் மிகவும் எளிதாக இதெல் லாம் நடந்துவிடும் என்று ரசிகர் ஒருவர் அவருக்கு பதில் அளித்திருக்கிறார்.


More Cinema News