தளபதி 65 பட இயக்குனர் குழப்பம் தீரவில்லை.. புதுப்பட்டாசு கொளுத்திபோட்ட ரசிகர்கள்..

by Chandru, Nov 14, 2019, 16:25 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கும் நிலையில் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 65' குறித்த தகவல்கள் நேற்று தீயாக பரவியது.
அருண் விஜய் நடித்த தடையற தாக்க, தடம் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குகிறார். இது சஸ்பென்ஸ் த்ரில் கதை யாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதை யடுத்து மகிழ் திருமேனிக்கு பலரும் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக் களை ஏற்றுக்கொண்டாலும மகிழ் திருமேனி யின் பதில் அவர் விஜய் படத்தை இயக்குவ தாக உறுதி செய்யவில்லை.
'தளபதி 65' படம் பற்றி தகவல் எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அப்படி ஒரு படம் பண்ணு வதாக இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி' என்று தெரிவித்தார்.
விஜய் தரப்பில் இதுபற்றி கூறும்போது ,தளபதி 64 படப்பிடிப்பு தற்போது நடக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. 'தளபதி 65' பற்றி வரும் தகவல்கள் வதந்தி என்றனர். இந்நிலையில் விஜய் 65 படத்தை ஷங்கர் இயக்குவார் என்று ஒரு தரப்பும், சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்களை இயக்கிய பேரரசு இயக்குவார் என்று இன்னொரு தரப்பும் தளபதி 65 பற்றி புதிய பட்டாசு கொளுத்திப்போட்டிருக்கின்றனர்.


More Cinema News