வட சென்னை 2ம் பாகம் நிறுத்தி வைப்பா? கைவிடப்பட்டதா? பெரிய பட்ஜெட்டால் படம் பெண்டிங்..

by Chandru, Nov 14, 2019, 16:44 PM IST
Share Tweet Whatsapp

தனுஷ் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி யாகி வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. குப்பத்து பகுதி இளைஞர்கள் மற்றும் அங்குள்ளவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப் பட்டிருந்தது.

இதன் 2ம் பகுதி உருவாக்கப் படும் என்று ஏற்கனவே இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வரை தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் தனுஷ் நடித்த அரசுன் படத்தை வெற்றி மாறன் இயக்கி முடித்தார்.

வட சென்னை 2ம் பாகம் என்ன ஆச்சு... படம் எப்போது வெளிவரும் என்று வெற்றி மாறனிடம் கேட்டபோது,'வடசென்னை 2ம் பாகத்தை உருவாக்க பெரிய பட்ஜெட் தேவைப்படும்.  முதல்பாகம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. 2ம் பாகமும் அந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மிகப் பெரிய பட்ஜெட் தேவைப் படுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் இப்படம் உருவாகும்' என்றார்.


Leave a reply