பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. இதையடுத்து தற்போது விஜய்க்கு வில்லனாக தளபதி 64 படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் ஷங்கர் இயக்கும் இந்தியன்2 படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சமீபத்தில் சென்னையில் நடந்த கமல் 60 வருட திரையுலக நிறைவு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்துகொண்டார். அப்போது விஜய்சேதுபதி, கமலுடன் நடிக்க 2 முறை வாய்ப்பு வந்தது. மிஸ் செய்து விட்டேன். மறுபடியம் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றார். விஜய்சேதுபதி இவ்வாறு பேசியதையடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் அதை விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்டு கமலுடன் நடிக்கிறார் என்றும் தகவல் வந்தது. ஆனால் இதுபற்றி கூறிய விஜய்சேதுபதி, இந்தியன் 2வில் நான் நடிப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. அப்படத்தில் நான் நடிக்கவில்லை என கூறி உள்ளார்.