ரஜினியுடன் மாற்றுதிறனாளி பிரணவ் செல்பி.. உருக்கமான சந்திப்பால் நெகிழ்ச்சி..

by Chandru, Dec 3, 2019, 17:54 PM IST
Share Tweet Whatsapp
தொடர்ந்து 2 ஆண்டுகளாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. தன்னார்வலர்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்துவருகின்றனர். வெள்ள பாதிப்பு நேரத்தில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி  பிரணவ் என்பவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் அளித்தார்.
இந்த விஷயம் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தெரியவர அவர் பிரணவை நேரில் அழைத்து  பாராட்டினார்.
 
பிரணவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது ரஜினிக்கு தெரியவர போயஸ்கார்டன் இல்லத்துக்கு அவரை வரவழைத்து சந்தித்தார் ரஜினி. இது உருக்கமான சந்திப்பாக இருந்தது. சுமார் 20 நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டி ருந்த ரஜினி, பிரணவின் லட்சியம் என்ன என்பதை எல்லாம் கேட்டறிந்து அவை நிறை வேற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் ரஜினிக்கு பிரணவ் தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் ரஜினி யுடன் செல்பி எடுக்க அவர் அனுமதி கேட்ட போது அதற்கு சம்மதித்தார். தனது கால் விரலுக்கு இடையே செல்போனை வைத்து ரஜினியுடன் செல்பி எடுத்தார் பிரணவ். இதுவொரு நெகிழ்ச்சியான சந்திப்பாக  அமைந்தது என்று பலரும் பாராட்டினார்கள்.

Leave a reply