மணிரத்னம் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்..

by Chandru, Dec 6, 2019, 17:43 PM IST
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நடத்திர தேர்வு பெரிய சவாலாக இருக்கிறது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வரும் ஒரு சில நடிகர்கள் முதலில் ஓகே சொல்லிவிட்டுபின்னர் விலகி செல்கின்றனர். ஏற்கனவே சத்யராஜ் நடிக்க ஒகே சொன்னார். பிறகு விலகி விட்டார். நயன்தாரா, அமலாபாலும் அப்படியே விலகியிருக்கிறார்கள். தற்போது நடிகர் பார்த்திபன் அப்படத்திலிருந்தி விலகியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
நடிகர், நடிகைகள் பட்டியல் இறுதியாகி பட தரப்பிலிருந்து உறுதியான பட்டியல் வரும் வரை இதுபோன்று நடிகர்கள் வருவதும் விலகுவதும் என்ற தகவல் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கும் என்கிறது பட தரப்பு. ஏனென்றால் இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் தேவைப்படுகிறது.
பெரிய படம் என்பதால் கால்ஷீட்டும் ஒரு வருடம் நெருக்கத்துக்கு தேவைப்படும். அதை எல்லாம் சரி செய்து நடிப்பது ஒரு சிலருக்கு முடியாத காரியமாக இருக்குமாம். தற்போதுள்ள பட்டியலுடன் மேலும் சில நட்சத்திரங்களும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Leave a reply