24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..

by Chandru, Dec 6, 2019, 17:53 PM IST
Share Tweet Whatsapp

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன். இவர் அஜீத்தின் ஆரம்ப காலகட்டத்தில் `மைனர் மாப்பிள்ளை. படத்தை இயக்கினார்.

இப்படம் 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி 24 வருடங்களுக்குப்பிறகு, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இப்படம் மெருகேற்றப்பட்டு வருகிறது. இதில் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, சுபாஸ்ரீ,  ஒய்ஜி மகேந்திரன், வடிவேல், விவேக் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

மைனர் மாப்பிள்ளை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கும் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் தற்போது அப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தை மீண்டும் புதிய பொலிவுடன் வெளியிட உள்ளனர்.


Leave a reply