தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்..

Actress Kangana and team offered prayers to deceased Amma

by Chandru, Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இதற்காக அவர் ஜெயலலிதா நடித்த படங்கள், அவரது அரசியல் பிரசார வீடியோக்களை பார்த்து ஜெயலலிதாவின் ஸ்டைல், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றை கவனித்தார். தமிழ் பேசவும், பரத நாட்டியுமும் கற்றார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
பச்சை நிறத்தில் மேல் அங்கி அணிந்து இரட்டை இலை காட்டுவதுபோல் கங்கனா நடித்த அரசியல் பொதுக்கூட்ட காட்சி படமாக்கப்பட்டு டீஸராக வெளியிடப் பட்டது. அதேபோல் வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா வின் பாடல் காட்சிக்கு கங்கனா நடனம் ஆடும் காட்சியும் படமாக்கப் பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜெய லலிதா மறைந்து 3வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில் தலைவி படப்பிடிப்பில் பங்கேற்ற கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினார்.

You'r reading தலைவி ஜெயலலிதாவுக்கு தலைவி நடிகை அஞ்சலி.. ஷூட்டிங்கில் 3ம் ஆண்டு நினைவு நாள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை