ஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது. லண்டனில் உள்ள இதழ் சார்பில் 10 ஹீரோக்களின் பெயர்களை அறிவித்து போட்டியை நடத்தியது.
லட்சக்கணக்கான ரசிகர், ரசிகைகள் பல நாடுகளிலிருந்து பங்கேற்று வாக்களித்து கவர்ச்சி ஹீரோவை முடிவு செய்தனர். இதில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் முதலிடம் பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரசிகைகளை கவர்ந்த ஹீரோவாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வானார்.
இதுபற்றி ஹிருத்திக் ரோஷன் கூறும்போது, தன் மீது ரசிகைகள் காட்டி அன்புக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால் பிரபாஸ் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்.