சீனியர் நடிகருடன் ஜோடி போட ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகை ”மெட்ராஸ்” நாயகிக்கு அடிச்சது யோகம்..

by Chandru, Dec 26, 2019, 10:25 AM IST

கார்த்தியுடன் மெட்ராஸ் படத்தில் குடிசை மாற்றுவாரிய பகுதி பெண்ணாக நடித்து கவர்ந்தவர் கேத்ரின் தெரசா. அடுத்தடுத்து நடிப்பு திறமைகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் படுகவர்ச்சியாக நடித்து கமர்ஷியல் களத்துக்குள் புகுந்தார்.

இதனால் மெட்ராஸ் படத்தில் அவர் ஈட்டிய பெயர் அப்படியே கிடப்பில் நின்றுவிட்டது. அடுத்தடுத்து. கலகலப்பு 2, கதாநாயகன், நீயா 2 போன்ற படங்களிலும் கவர்ச்சி நாயகியாக நடித்தார்.  

அனுஷ்கா, திரிஷா, காஜல், நயன்தாரா போன்றவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிய நிலையில் கேத்ரின் தெரசாவின் சம்பளம் லட்சங்களிலேயே இருந்து வந்தது. தற்போது அவரது சம்பளததை கோடிகளில் உயர்த்தியிருக்கிறார்  சீனியர் நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா.

இயக்குனர் பயோபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்டி.பாலகிருஷ்ணா. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை களுக்கு வலை வீசப்பட்டது. யாரும் சிக்கவில்லை. சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவிருப்பாக தகவல் வெளியானது. இதையறிந்து என்.டி.பாலகிருஷ்ணா வுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்று சோனாக்‌ஷியே டிவிட்டரில் அறிவித்துவிட்டார்.  

இந்நிலையில் தான் கேத்ரின் தெரசாவை அணுகி அவருக்கு 1 கோடி சம்பளம் தருவதாக கூறினர். அதை ஏற்று அவர் ஜோடி போட சம்மதித்திருக்கிறார். சீனியர் ஹீரோவுடன் நடித்தாலும் நடிகைகளுக்கு என்றைக்கும் மவுசு குறைந்தவிடுவதில்லை. அதேநேரம் கேத்ரினா வின் சம்பளமும் இனி கோடிகளில் தொடங்கிவிடும்.

ஒரு பக்கம் சீனியர் ஹீரோவுடன் நடித்தாலும் மற்றொரு பக்கம் இளம் ஹீரோ விஜயதேவர கொண்டாவுடன் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கேத்ரின்.


Leave a reply