தந்தையை பறிகொடுத்த ஹாலிவுட் நடிகர்.. தாயும் மரண போராட்டம்..

Stepfather of Crazy Rich Asians actor Nico Santos

by Chandru, Mar 31, 2020, 11:17 AM IST

உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி வாங்கிவிட்டது. லட்சக்கணக்கானவர்களை வைரஸ் நோய் பிடித்திருக்கிறது .

உலகையே திகிலூட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி வாங்கிவிட்டது. லட்சக்கணக்கானவர்களை வைரஸ் நோய் பிடித்திருக்கிறது . ஹாலிவுட் நடிகர் நிகோ சாண்டோஸ். 'கிரேஸி ரிச் ஏசியன்ஸ்', 'பால் பிளர்ட் மால் காப் 2' படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தன்னுடைய வளர்ப்புத் தந்தை கொரோனா வைரஸ் பாதிப் பால் இறந்துவிட்டார் எனவும் தனது அம்மா தற்போது உயிருக்குப் போராடி வருகிறார் என்றும் சோகமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

'கொரோனா வைரஸ் தடை காரணமாகத் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. எனது அம்மா உடல் நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள்' என்று ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நிகோ சாண்டோஸ்.

You'r reading தந்தையை பறிகொடுத்த ஹாலிவுட் நடிகர்.. தாயும் மரண போராட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை