இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய எதிர்நீச்சல், இருகோடுகள், வெள்ளி விழா போன்ற பல படங்களில் நடித்ததுடன் ஏராளமான தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் ஜெயந்தி. இவர் பெங்களூரில் வசிக்கிறார். ஊரடங்கிற்கு முன்பு பெங்களூரிலிருந்து ஒரு முக்கிய வேலையாக ஹம்பி பகுதிகுச் சென்றார். அங்கிருந்து புறப்படுவதற்கு முன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூர் புறப்பட முடியால் ஒரு ஓட்டலில் தாங்கினார். ஊரடங்கு முடிந்ததும் புறப்பட எண்ணியபோது மீண்டும் மே 3வரை இரண்டாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஹம்பியிலிருந்து புறப்பட முடியாமல் அங்கேயே சிக்கி இருக்கிறார். நடிகை ஜெயந்திக்கு தற்போது 75 வயதாகிறது.