கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன்.இவர் மன அழுத்தத்திலிருக்கிறாராம். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது,.கடந்த 2 வாரமாகவே நான் சோகத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கிறேன். அதற்கு காரணம் நான் வளர்க்கும் 3 நாய்க் குட்டிகளில் 2 குட்டிகள் பார்வோ வைரஸ் தாக்கி இறந்துவிட்டன.
அவைகளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அவற்றின் மீது கவனமாக இருங்கள். என்னால் இரண்டு நாய்கள் இறந்த துக்கத்திலிருந்து மீள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன்.