நடிகை வனிதாவிடம் திடீர் மன்னிப்பு கேட்ட இயக்குனர்.. திருமண சர்ச்சை விவகாரம்...

by Chandru, Aug 3, 2020, 12:07 PM IST

நடிகர் வனிதா, டிவி டெக்னீஷியன் பீட்டர்பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். வனிதா 3வதாக இத்திருமணத்தைச் செய்தார். பீட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனிதாவுக்கும் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

லட்சுமி ராமகிருஷ்ணன். கஸ்தூரி, சூரியா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்தார் வனிதா. சூரியாதேவியை போலீசார் கைதுசெய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் திடீரென்று வனிதாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.இது குறித்து வனிதா டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:நாஞ்சில் விஜயன் என்னை அழைத்து ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் என்னிடம் சொன்னார். அவரும் நானும் ஒருபோதும் சந்தித்ததில்லை, ஒருவருக்கொருவர் கூட தெரியாது என்பதால் அவருக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை. இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் சூரியா தேவி முக்கிய காரணம். கஸ்தூரி வழக்கம் போல்அவரே உள்ளே வந்து நிலைமையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்
மற்றவர்களின் பிரச்சனைகளை ஆராய்வதை நிறுத்துங்கள்.இடையில் வழக்கறிஞராகவோ அல்லது நீதிபதியாகவோ ஆக நீங்கள் முயற்சிப்பது பிரச்சனையை பெரிதாக்குகிறது, இறுதியாக இப்பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்களே அதைத் தீர்த்துக் கொள்வார்கள், அப்போது மூன்றாவது நபர் ஒரு முட்டாளாகத் தான் ஆவார்.

நாஞ்சில் விஜயன், என்னைப் பற்றி வெளியிட்ட வீடியோக்களால் நான் மகிழ்ச்சியடையவில்லை என்று அவரிடமே வெளிப்படுத்தினேன், அதையெல்லாம் அகற்றுவதாகவும், தனது சேனலில் உள்ள ஒரு வீடியோவுடன் அதை தெளிவுபடுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார். இது இரண்டு பேருக்குள் உள்ள ஒரு பிரச்சனை இருக்கும்போது அவர்களே நேரில் பேசும்போது அது தீர்ந்துவிடுகிறது என்பதைக் காட்டுகிறது. நாஞ்சில் விஜயன் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுத்து விடப்பட்டிருக்கிறார். அவர் ஒரு இளம் திறமைசாலி, வளர்ந்து வரும் கட்டத்தில் அவரைச் சுற்றி சர்ச்சைகள் தேவையில்லை என்று நான் உணர்ந்ததால் அவரது மன்னிப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

இவ்வாறு வனிதா தெரிவித்திருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை