சுஷாந்த் தற்கொலை பரபரப்பு தொடரும் நிலையில் மற்றொரு இந்தி நடிகர் தற்கொலை.. மின் விசிறியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார்..

by Chandru, Aug 6, 2020, 16:31 PM IST

பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில் சுஷாந்த் தந்தை கே கே.சிங் பாட்னா போலீசில் காதல் நடிகை ரியா மீது புகார் அளித்தார். இதனால் மும்பை, பாட்னா போலீசுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மும்பைக்கு விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை கொரோனா முகாமில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் ரியா. அதனை கோர்ட் தள்ளுபடி செய்தது.சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்பத் தயார் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.சுஷாந்த் தற்கொலை பரபரப்பாக நடந்து வரும் நிலையில் மற்றொரு இந்தி நடிகர் மின்விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கஹானி கர் கர் கி, கியௌன்கி சாஸ், உள்ளிட்ட பல்வேறு டிவி தொடர்களில் நடித்திருப்பதுடன் ச கரண் ஜோஹர் தயாரித்த ஹசி து பாஸி மற்றும் ஷாருக்கான் தயாரித்த படமொன்றிலும் சிறிய வேடங்களில் நடித்தவர் சமீர் சர்மா.மும்பை மலாடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். அடிக்கடி வெளியில் சென்று நடமாடும் அவர் சென்ற 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதைக் கவனித்த காவலாளி இதுபற்றி அக்கம் பக்கத்தாரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்த போது சமீர் சர்மா மின் விசிறியில் தூக்குப் போடு தற்கொலை செய்தது தெரிந்தது.

அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த குடியிருப்புக்குக் குடி வந்துள்ளார் சமீர். இந்நிலையில் லாக்டவுன் வந்ததால் வேலை இல்லாமல் இருந்துள்ளார். போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே டிவி நடிகர் மன்மீத் கிரேவல், பிரேக்‌ஷா மேத்தா போன்றவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை