அந்தரத்தில் கோளாறு செய்த விமானத்தை அடக்கிய அஜீத்..

by Chandru, Aug 7, 2020, 11:34 AM IST

தல அஜீத் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. அஜீத்தைப் பொறுத்த வரை அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் வேறு கலைகளிலும் கைதேர்ந்திருக்கிறார்.
ஹூட்டிங்கில் திடீரென்று பிரியாணி செய்து படக் குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்துகிறார். ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டும், சர்வதேச அளவில் கார் ரேஸில் கலந்து கொண்டும், பைக் ரேஸ் ஓட்டியும் ஆச்சரியப்படுத்துகிறார்.

தக்ஷா என்ற குழு கொண்ட பல்கலைக் கழக மாணவர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கி அவர்களுக்கு ஆளில்லா விமானம் செய்யவும், இயக்கவும் பயிற்சி அளித்ததுடன் அந்த குழுவுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். இவர் தயாரித்தளித்த இந்த ட்ரோன் விமானம் கர்நாடகாவில் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்பட்டது. அதற்காக அம்மாநில துணை முதல்வர், நடிகர் அஜீத்துக்குப் பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில் அந்தரத்தில் பறந்த ஆளில்லா விமானம் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது. அதில் இருந்த கியர்கள் சரியாக வேலை செய்யவில்லை அந்த விமானத்தை லாவகமாக அஜீத் தரை இறக்கினார். அதைக்கண்டு மாணவர்கள் அவரை கைத்தட்டி வாழ்த்தினர்.

இந்த வீடியோ நெடில் வைரலாகி வருகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை