கண்ணியமாக வாழும் விஜய், சூர்யா மீதான பேச்சை நடிகை இத்துடன் நிறுத்த வேண்டும்.. இனியும் பொறுக்கமுடியாது. பாரதிராஜா கடும் கண்டனம்..

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் 8 தோட்டாக்கள் என ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதும். இவர் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசினார். அதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா நடிகை மீரா மிதுன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:என்‌ இனிய தமிழ்‌ மக்களே... வணக்கம்‌! சமீபமாகக் கேட்கும்‌ அல்லது பார்க்கும்‌ பல சம்பவங்கள்‌ அதிர்ச்சியைத்‌ தருகிறது. புகழ்‌ போதையில்‌ ஒருவரையொருவர்‌ இகழ்வதும்‌, இன்னொருவரின்‌ தனிப்பட்ட வாழ்க்கையைப்‌ பற்றி அவதூறு பேசுவதும்‌ அதை சமூக ஊடகங்கள்‌ வெளிக் கொணர்வதும்‌ கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப்‌ போலவும்‌, மல்லாக்க படுத்துக்‌ கொண்டு எச்சிலை உமிழ்வதைப்‌ போலவும்‌ தமிழ் சினிமா வெளியில்‌ அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம்‌ தொடங்கியுள்ளதோ என ஐயம்‌ கொள்கிறேன்‌.

ஒருவரையொருவர்‌ மதித்து வேலை செய்த காலகட்டத்தை, ஒருவரையொருவர்‌ மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் ‌கடந்து விட்டோமா என்ன? என்ற கவலையும்‌ சேர்ந்துகொள்கிறது. இதோ, நம்‌ அன்புத்‌ தம்பி விஜய்‌, சூர்யா போன்றோர்‌ எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்‌. கவர்ச்சிகரமான இந்தத்‌ துறையில்‌ தன்‌ பெயர்‌ கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள்‌ வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்‌?திருமணம்‌ செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர்‌ என்பதை இத்தனை ஆண்டுக்கால அவர்களின்‌ வாழ்க்கை நம்‌முன்‌ கண்ணாடி போல்‌ நிற்கிறதே.

அழகிய ஓவியத்தின்‌ மீது சேறடிப்பது போல மீரா மிதுன்‌ என்கிற பெண்‌ தன்‌ வார்த்தைகளைக் கடிவாளம்‌ போடாமல்‌ வரம்பு மீறிச் சிதறியுள்ளார்‌. திரையுலகில்‌ பயணிக்கும்‌ ஒரு மூத்த உறுப்பினராக நான்‌ இதைக்‌ கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்‌. சிறு பெண்‌, பக்குவமில்லாமல்‌ புகழ்‌ வெளிச்சம்‌ தேடிப்‌ பேசுவதை இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. கவுரவமாக வாழும்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தைப்‌ பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள்‌, துறை சார்ந்தவர்கள்‌ வேடிக்கை ‌பார்த்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. இதுவரை பேசியதை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கும்‌ பணி செய்கிறார்‌. சத்தமில்லாமல்‌ விஜய்யும்‌ நிறைய மனிதாபிமானப்‌ பணிகளை மேற்கொண்டு வருகிறார்‌. அப்படிப்பட்டவர்களை, அவர்களின்‌ குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும்‌ மிச்சமிருக்கிறது. உழைத்துப்‌ போராடி எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர்‌ வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள்‌ இருக்கிறது. அடுத்தவரைத்‌ தூற்றிப்‌, பழித்து அதில்‌ கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான்‌ இருக்கும்‌. வார்த்தைகள்‌ பிறருக்கு வலியைத்‌ தருவதாக அமையாமல்‌, இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம்‌ ஏற்படுத்தும்‌. பசியைப்‌ போக்கும்‌. அவசியமானவையாக அவை உதடு தாண்டி வெளிவரட்டும்‌.

உயரத்திலிருக்கும்‌ நட்சத்திரங்களின்‌ ரசிகர்களின்‌ பின்னூட்ட வார்த்தைகளும்‌ மிகக்‌ கேவலமாகவும்‌ ஆபாசமாகவும்‌ இருப்பதைக்‌ கவனித்தே வருகிறேன்‌. நடிகை கஸ்தூரி போன்றோர்‌ அதற்கு இலக்காகி உள்ளனர்‌. ரசிகர்கள் தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்‌... ? நமக்கென்ன என நட்சத்திரங்களும்‌ அமைதியாக வேடிக்கை‌ பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள்‌ ஒவ்வொருவரின்‌ கடமையும்‌ கூட சமூக வலைத்தளங்களில்‌ ரசிகர்கள்‌ பயன்படுத்தும்‌ வார்த்தைகள்‌ படிக்கக்‌ கூசும்‌ கேவலமானவையாக உள்ளன.

ஒரு அறிக்கைவிட்டாலாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம்‌. அந்த ரசிகன்‌ எங்கிருந்தோ கழிவின்‌ மீது கல்லடிக்கிறான்‌. பாருங்கள்‌, அது நம்‌ விட்டு அடுப்படியில்‌ நாறுகிறது. உங்கள்‌ பெயரும்‌ புகழும்‌ நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள்‌ உச்ச நட்சத்திரங்களே, என்‌ போன்றோருக்கு உங்கள்‌ மீது தூசு விழுந்தாலும்‌ உத்திரம்‌ விழுந்தது போல்‌ வலிக்கிறது. நம்‌ சகக்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தை அவதூறாகப்‌ பேசியும்‌, நடிகர்‌ சங்கம்‌ மட்டுமல்ல வேறெந்த சங்கமும்‌ எந்தவிதமான எதிர்க்குரலும்‌ எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின்‌ தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன்‌. ஆனால்‌, அசைவில்லை. தேர்தல்‌ நடைபெறாத சங்கம்‌ என்றால்‌, சொந்தத்‌ தேவைகளுக்காகக்‌ கூட கண்டனக் குரல்‌ தராத அளவிற்குக் குரல்வளை நெறி பட்டா கிடக்கிறது?யாரோ ஒருவனின்‌ அவமானம் தானே? நாம்‌ ஏன்‌ பேச வேண்டும்‌ என்ற எண்ணம்‌ எழுந்தால்‌ நம்‌ வீடு அசிங்கத்தால்‌ அமிழ்ந்துபோகும்‌. அந்த சேறு நாளை உன்‌ மீதும்‌ வீசப்படும்‌ இல்லையா? எல்லோரும்‌ கூடிக்‌ கண்டித்திருக்க வேண்டாமா?
சமூக ஊடகங்களும்‌ இப்படிப்பட்ட அவதூறுகளைக்‌ கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. முன்பெல்லாம்‌ பத்திரிகை தர்மம்‌ என்ற ஒன்றும்‌. ஊடகங்களும்‌ கலைஞர்களும்‌ ஒரு குடும்பம்‌ என்ற கட்டுக் கோப்பிலிருந்தோம்‌. ஆனால்‌ இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று ஒருவருக்கொருவர்‌ மரியாதை செய்து இணக்கமாக உயரும்‌ சூழ்நிலைகளை விரைவில்‌ உருவாக்குவீர்கள்‌ என்று நம்புகிறேன்‌. நன்றி.,

இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :