கேப்டன்‌ கோபிநாத்‌ பாத்திரத்திற்கு முதல்‌ மற்றும்‌ கடைசி தேர்வு இந்த ஹீரோதான்..

One and Only Hero Surya For Gobinath Character: Sudha Kongara

by Chandru, Aug 22, 2020, 16:49 PM IST

சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். கதாநாயகி யாக அபர்ணா பாலமுரளியும்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ மோகன்‌ பாபு, பரேஷ்‌ ராவல்‌ ஆகியோரும்‌ நடித்துள்ளனர்‌. இப்படம் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருந்தது, கொரோனா ஊரடங்கால தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் வேறுவழியில்லாமல் இப்படம் அமேசான் பிரைமில் வெளியாக முடிவாகி இருக்கிறது. இதனை சூர்யா அறிவித்திருக்கிறார்.

சூரரைப்போற்று அக்டோபர்‌ 30 ஆம்‌ தேதி அமேசான்‌ ப்ரைம்‌ வீடியோவில்‌ தமிழ்‌ மற்றும்‌ தெலுங்கு மொழிகளில்‌ உலகளவில்‌ திரையிடப்படப்போகிறது.

இப்படத்தில் சூர்யா நடித்தது பற்றி இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது:

சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்‌. கேப்டன்‌ கோபிநாத்‌ கதாபாத் திரத்திற்கு அவர்‌ தான்‌ எனது முதல்‌ மற்றும்‌ கடைசி தேர்வாக இருந்தார்‌. அமேசான்‌ ப்ரைம்‌ வீடியோவில்‌ படத்தை பிரீமியர்‌ செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும்‌ அதை ஆவலாக எதிர்பார்த்து காத் திருக்கிறேன்‌. உலகெங்கிலும்‌, பல்வேறு வகையான மக்கள்‌ இந்தப்‌ படத்தைப்‌ பார்க்கப்‌ போகிறார்கள்‌ என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமாமான விஷயம்‌ தான்‌.


சூரரைப் போற்று பல வழிகளில்‌ மிகவும்‌ சிறப்பு வாய்ந்த படம்‌, இது உலகளாவிய இணைப்பைக்‌ கொண்ட ஒரு இந்தியக்‌ கதை. ஏர்‌ டெக்கான்‌ நிறுவனர்‌ கேப்டன்‌ ஜி. ஆர்‌. கோபிநாத்தின்‌ வாழ்க்கையில்‌ நடந்த நிகழ்வுகள்‌ மற்றும்‌ போராட்டங்களை அடிப்படையாகக்‌ கொண்ட படம்‌. இவ்வாறு சுதா கொங்கரா கூறினார்.

சூர்யா கூறியதாவது:
இயக்குனர்‌ சுதாவிடம்‌ கதையை நான்‌ கேட்ட தருணத்தில்‌, அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும்‌ என்பதில்‌ நான்‌ உறுதியாக இருந்தேன். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட்டின்‌ கீழ்‌ தயாரிக்கவும்‌ விரும்பினேன்‌. கேப்டன்‌ கோபிநாத்தின்‌ பாத்திரம்‌ எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும்‌, இறுதியாக எங்கள்‌ படைப்பை பார்க்கும்‌போது மிகவும்‌ பெருமையாக உள்ளது. நாம்‌ இதற்கு முன்‌ சந்தித்திராத இப்போதிருக்கும்‌ இந்த சூழ்நிலையில்‌, உலகெங்கிலும்‌ உள்ள பார்வையாளர்கள்‌ அமேசான்‌ ப்ரைம்‌ வீடியோவில்‌ தங்கள்‌ வீடுகளி லிருந்து “சூரரை போற்று”ஐப்‌ பார்க்க முடியும்‌ என்பதில்‌ நான்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. இந்த படம்‌ எங்கள்‌ அன்பின்‌ உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப்‌ போகிறது என்பதில்‌ சந்தோஷமாக உணர்கிறேன்‌ என்றார்.

You'r reading கேப்டன்‌ கோபிநாத்‌ பாத்திரத்திற்கு முதல்‌ மற்றும்‌ கடைசி தேர்வு இந்த ஹீரோதான்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை