நயன்தாரா பட வாய்ப்பை தட்டிப் பறித்த பிரபல நடிகை..

Advertisement

திரையுலகில் சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த 2 வருடத்துக்கு பிஸி என்று ஒரேபேடாகப் போட்டு கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனரை தெறிக்க விடுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்களும் இந்த பாணியை கடைப்பிடிக்கின்றனர். நயன்தாராவுக்காகக் காத்திருந்து வெறுத்துப்போன ஒரு இயக்குனர் வேறு ஹீரோயினை தேர்வு செய்துவிட்ட சம்பவம் பரபரப்பாகி வருகிறது விளையாட்டு வீராங்கனை ஸ்கிரிப்ட் ஒன்றைத் தயாரித்திருந்தார் நந்தா பெரிய சாமி என்ற இயக்குனர். இது விளையாட்டு வீராங்கனை ஒருவரின் வாழ்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து ஸ்கிர்ப்ட்டை உருவாக்கினார். நயன்தாராவிடம் முழு ஸ்கிரிப்ட்டும் சொன்ன போது அவருக்குப் பிடித்துவிட, இப்படத்தில் நடிக்கிறேன் கொஞ்சம் காத்திருங்கள் என்றாராம். இயக்குனரும் காத்திருந்தார் ஒரு வருடம் ஓடிய நிலையில் நயன்தாரா கால்ஷீட் பற்றி மூச்சு விடவில்லை.

விளையாட்டு வீராங்கனை ஸ்கிரிப்ட் பற்றி டாப்ஸிக்கு தெரியவர அவரே இயக்குனருக்கு போன் செய்து அந்த ஸ்கிரிப்ட்டில் நான் நடிக்கிறேன், தயாரிப்பாளரையும் தருகிறேன், பிடியுங்க அட்வான்ஸ் என்று ஒரு பெரிய தொகையையும் அட்வான்ஸாக தந்தாராம். இப்போது நயன்தாராவுக்குப் பதில் அந்த ஸ்கிரிப்ட்டில் டாப்ஸி நடிக்க உள்ளார். ஏற்கனவே சில இந்தி நடிகைகள் விளையாட்டு வீராங்கனை படத்தில் நடித்து வெற்றி கண்டிருக்கின்றனர். டாப்ஸியும் துப்பாக்கி சுடும் வீராங்கனை வேடமொன்றில் கடந்த ஆண்டு நடித்தார். இதுபோன்ற படங்களுக்கு இந்தியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வரவேற்பு உள்ளது.

நயன்தாரா கமர்ஷியல் ஹீரோயினாக வெற்றி பெற்றிருக்கிறார். மற்ற நடிகைகளை விட கூடுதல் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் இதுபோன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கவில்லை என்ற குறை நீண்ட காலமாகவே இருக்கிறது. அந்த குறையைப் போக்கும் விதமாக வந்த விளையாட்டு வீராங்கனை ஸ்கிரிப்பட்டையும் அவர் தவறவிட்டது துரதிர்ஷ்டம் தான் எனக் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>