விஜய் பட இயக்குனர் தயாரித்த மாஸ்டர் வில்லனின் படம் ஒடிடிக்கு வருகிறது..

Arjun Das Movie Andhaghaaram On OTT release

by Chandru, Sep 2, 2020, 19:51 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி'. இப்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ், முதல் படத்திலேயே நடிப்பாலும் தனது தனித்துவமான குரலாலும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காணச் செய்தார். அடுத்து லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் மீண்டும் அர்ஜூன் தாஸ் வில்லட் வேடத்தில் நடித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்துக்கும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படமும் ஒரே நாளில் வெளியாகி கடும் போட்டி நடந்தது. சில இடங்களில் பிகில் படத்தை காட்டிலும் கைதி படம் வசூல் அதிகமாக இருந்தது. பிகில் படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படத்துக்கிடையே போட்டி இருந்தாலும் கைதி படத்தில் நடித்த வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் அட்லியின் கவனத்தில் இடம் பிடித்தார். இயற்கைக்கு அப்பாற்பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் படமொன்றை அட்லி தயாரிக்க எண்ணியிருந்தார். அந்த படத்தில் அர்ஜூன் தாஸை ஹீரோ வாக்கி விட்டார். அப்படத்துக்கு அந்தகாரம் என பெயரிடப்பட்டது. இயக்குனர் அட்லீ வழங்க அந்தகாரம் படத்தை சுதன் சுந்தரம், ஜெயராம், பிரியா அட்லீ மற்றும் கே பூர்ணா சந்திரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இதில் அர்ஜூன் தாஸுடன் நடிகர்கள் மீஷா கோஷல், 'ஜீவா' ரவி,' ரெயில் 'ரவி மற்றும் மகேந்திர முல்லத் ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டரை நிமிட டிரெய்லர், பூனை மற்றும் மவுஸ் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்தது. அது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
'அந்தகாரம்' இம்மாதம் செப்டம்பர் மாதம் பிரபலமான ஒடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாக உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை