மாதவன்- அனுஷ்கா படம் ஒடிடியில் வெளிபிட சத்தமில்லாமல் ஒப்பந்தம்..

by Chandru, Sep 13, 2020, 16:31 PM IST

பிரபாஸ் ஜோடியாக பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த அனுஷ்கா அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பிரபாஸ் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது எல்லாமே வதந்தியாகவே இன்னமும் உலவிக்கொண்டிருக்கிறது.


அனுஷ்கா உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். எதிர்பார்த்தளவுக்கு இல்லாவிட்டாலும் ஓராளவுக்கு எடை குறைந்தது. இதற்காக இரண்டு வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தவர் முடிவில் நிசப்தம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
காது கேளாதவாய் பேசாத மாற்று திறனாளியாக இப்படத்தில் வேடம் ஏற்றிருக்கிறார் அனுஷ்கா. மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். நான்கு இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது.


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிபோனது எப்ரலில் வெளிடலாம் என்று எண்ணினர். அதற்குள் லாக்டவுன் வந்து தியேட்டர்களை ஷட் டவுன் ஆக்கிவிட்டது. இதையடுத்து நிசப்தம் ஒடிடியில் வெளியாகும் என்ற தகவல்கள் வந்த நிலையில் அதனை பட தரப்பு மறுத்து வந்தது.
தியேட்டரில் வெளியிட படக் குழு காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பு எப்போது என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது. அப்படியே திறந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பயந்து ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.ஏற்கனவே ஒடிடி தளத்தில் வெளியிட பேசி வந்த நிலையில் நிசப்தம் படத்தை பிரபல ஒட்டி தளம் பெரிய விலை கொடுத்து வாங்கி இருக்கிறதாம் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.


More Cinema News

அதிகம் படித்தவை