மாஸ்டர் பட இயக்குனர் அடுத்து இயக்குவது ரஜினி படமா? கமல் படமா? இன்று மாலை அறிவிப்பு வெளியிட இயக்குனர் முடிவு..

by Chandru, Sep 16, 2020, 10:12 AM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த பிகில் படத்துடன் டஃப் பைட் கொடுத்து கைதி ஹிட்டானது. அந்த படம் கார்த்திக்கு பிரேக்காக அமைந்த தோடு லோகேஷுக் கும் பிரேக்காக அமைந்தது. அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தியேட்டர்கள் திறந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்யக் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது, கமல்ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. லோகேஷுக்கு அடுத்தடுத்து குதிரைப் பாய்ச்சலில் பெரிய படங்கள் கிடைத்தது அவரது அதிர்ஷ்டமும், திறமையும் என்றாலும், அதில் கொரோனா குறுக் கிட்டு தடைகள் ஏற்படுத்தி வருகிறது. மாஸ்டர் படம் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு இந்நேரம் லோகேஷ் படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்திருப்பார். கொரோனா ஊரடங்கால் அண்ணாத்த படமே முடியாமல் தடைப்பட்டிருக்கிறது. இதனால் லோகேஷின் திட்டங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை.

தற்போது கமல் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தலைவன் இருக்கிறான் என்ற அரசியல் பின்னணி படத்தில் கமல் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்தியன் 2 படத்துக்குப் பிறகு அப்படம் படமாக இருந்தது. இந்நிலையில் தான் கமல் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி படத்துக்குப் பதிலாக இப்படத்தை லோகேஷ் இயக்க உள்ளாராம். இது அரசியல் பின்னணி படம்தானாம். இதெல்லாமே யூகமாகக் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை, தான் இயக்க உள்ளார். புதிய படம் பற்றி அறிவிப்பை வெளியிட உள்ளதாக லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் உலக நாயகன் கமல் நடிக்கும் படத்தைத்தான் லோகேஷ் இயக்க உள்ளதாகக் கமல் ரசிகர்கள் மெசேஜ் வெளியிட்டு வருவதுடன் படத்துக்கு எவனென்று நினைத்தாய் என்று டைட்டில் வைக்கவிருப்பதாகவும் மெஜேச் பகிர்ந்து வருகின்றனர். கமலின் விஸ்வரூபம் படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிதான் இந்த டைட்டிலாம்.
ரசிகர்கள் வெளியிட்டுள்ள யூகங்கள் சரியா? மாலை 6 மணிக்குத் தெரிந்துவிடும் லோகேஷ் இயக்க உள்ள அடுத்தபடம்.


More Cinema News

அதிகம் படித்தவை