அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் வில்லன் யார் தெரியுமா..?

by Chandru, Sep 16, 2020, 09:59 AM IST

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ், ஹிட், சூரரைப்போற்று ரிலீஸ், ஹிட். தனுஷின் ஜெகமே தந்திரம் ரிலீஸ், ஹிட். ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை தீபாவளிக்கு மோதல் என்று எழுத வேண்டிய செய்திகளை கொரோனா ஊரடங்கு கவிழ்த்துப்போட்டு இப்படங்கள் தியேட்டரில் வருமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்றளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டது. ஒருவழியாகச் சூரரைப்போற்று படத்தை ஒடிடிக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது.

ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டும் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஏற்பாடுகள் நடக்கிறது.ஈசிஆர் சாலையில் ஒரு அரங்கு உருவாகி வருகிறது. அங்கு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகளைப் படமாக்க உள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா.அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். குடும்ப கதை என்பதால் வில்லனுக்கு வேலை இருக்காது என்று கருதப்பட்ட நிலையில் பாலிவுட்டிலிருந்து ஒரு வில்லனை அழைத்து வருகிறார்களாம்.

இவர் புதுமுகம் இல்லை ஏற்கனவே கோலிவுட்டுக்கு அறிமுகமானவர்தான் கடந்த ஆண்டில் வெளியான விஜய்யின் பிகில் படத்தில் நடித்த ஜாக்கி ஷெராப் தான் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஈசிஆரில் திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்பில் இவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷுடன் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் ஜனவரியிலிருந்து படமாக உள்ளது. ஏற்கனவே ரஜினி நடித்துள்ள 50 சதவீத காட்சிகள் அண்ணாத்த படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளன. ரஜினி, ஜாக்கி ஷெராப் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜனவரியில் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

READ MORE ABOUT :

More Cinema News