கமலை வைத்து சிரிக்க சிரிக்க படம் இயக்கிய பிரபல இயக்குனர் கொரோனாவால் பாதிப்பு..

by Chandru, Sep 17, 2020, 10:41 AM IST

இந்தியன், மகாநதி, குணா, தேவர் மகன், தசாவதாரம், விஸ்வரூபம். குருதிப் புனல் என சீரியஸான படங்களில் நடிக்கும் கமல்ஹாசன் அப்படியே தனது பாணியை முற்றிலுமாக மாற்றி முழுக்க முழுக்க கிரேஸி மோகன் பாணியில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி விடுவார். அவர் நடித்த மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்கள் நகைச்சுவை பின்னணியிலான படங்கள் தான். இப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

இவர் தற்போது கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது அவ்வப்போது அது தளர்த்தப்படுகிறது. ஊரடங்கு இருந்தாலும் தளர்ந்தாலும் கொரோனா என்னமோ இங்கேயேதான் இருக்கிறது. மூத்த இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை வீடியோவில் தெரிவித்தார்.

பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரிந்தது. உடனடியாக வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். 88 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் மற்றும் தெலுங்கில் பல விருதுகள் வென்றவர். எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார். அதனால் தான் அவரால் காமெடி படங்களை இயல்பாக இயக்க முடிகிறது என்று ஒரு முறை பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா அறிகுறிகள் மிகவும் லேசானவையாகவே இருப்பதால் விரைவில் குணமடைவேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாசராவ்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை