நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா? விஷால், கார்த்தியிடம் நீதி மன்றம் கேள்வி..

Actors Association Election Highcourt New Order

by Chandru, Sep 17, 2020, 18:48 PM IST

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்க வில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே சமயம், தேர்தல் நிறுத்திய சங்கங்களின் பதிவாளர் உத்தரவை எதிர்த்து விஷாலும், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந் தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ்-ஐ நியமித்து மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டி ருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க் கப்பட வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரியான கூட்டுறவு சங்க பதிவாளரே கவனிப் பார் என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.


தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருவதாக குறிப்பிட்டுள் ளார். இதற்கு முன்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் நிர்வாகி கள் பதவி காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடிகர் சங்க பிரச்னையில், தமிழக அரசு ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டதாக வும் நடுநிலையோடு நடந்து கொள்ள வில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயா மல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ள தாக குறிப்பிட்டுள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநா ரயணன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் நடிகர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்ட தாகவும், அதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பல மாதங் களாக வாக்குகள் எண்ணாமல் இருப்ப தாக தெரிவிக்கப்பட்டது. இதையெல் லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளா மல் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப் பதாக வாதிடப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், புதியதாக தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறபித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதே வேலையில் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என குறிப்பிட்டு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
கொரோனா ஊரடங்கால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாதிக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்க மீதான விசரணையில் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பது குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவவிட்டுள்ளது.

You'r reading நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா? விஷால், கார்த்தியிடம் நீதி மன்றம் கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை