பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை கவலைக் கிடமானது, இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது, தொடர்ச்சியாக உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் வெளிநாட்டு டாக்டர்களிடம், ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தனர். திரையுலகினரும் அவருக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
சிகிச்சை நல்ல பலன் அளித்தையடுத்து எஸ்பிபி உடல்நிலை சீரானது. கொரோனா தொற்றும் குணம் ஆனது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மகன் எஸ்பி.சரண் வீடியோ மூலம் தோன்றி தகவல் தெரிவித்து வருகிறார்.
இன்று சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
அப்பா எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. ஆனாலும் அவர் இன்னும் வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையில் இருக்கிறார். மற்றபடி உடல்நிலையில் முன்னேற்றம் தொடர்கிறது. தொற்று எதுவும் இல்லை. இன்னமும் சில முன்னேற்றம் அவரது நுரையீரலில் தேவைப்படுகிறது. மூச்சுவிடுவதில் சீரான முன்னேற்றம் காணவேண்டி உள்ளது., உடல் பலமும் தேவைப்படுகிறது. பிசியோதெரபி தொடர்ச்சியாக தரப்படுகிறது,
அப்பா எழுந்து அமர்வதற்கு டாக்டர்கள் உதவுகின்றனர். அவரால் 15 முதல் 20 நிமிடம் வரை அமர்ந்திருக்க முடிகிறது. உங்கள் அனைவரின் பிரார்த்தனையும், எம்ஜிஎம் மருத்துவமனையின் டாக்டர் டீம், நர்ஸ்கள் தந்த சிகிச்சை ஒத்துழைப் பையும் மறக்க முடியாது. நேற்று முதல் அப்பா சுயமாக சாப்பிட தொடங்கி இருக்கிறார். இன்று 2வது நாள் அது அவரது உடல் பலத்துக்கு நல்லது. மீண்டும் உங்கள் அனைவருக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு சரண் கூறி உள்ளார்.