ரஜினி நடிகை மீது போதை பொருள் புகாரால் ரசிகர்கள், குடும்பத்தினர் அதிர்ச்சி.. கன்னித்தீவு போல் தொடரும் நடிகர் தற்கொலை விவகாரம்..

by Chandru, Sep 23, 2020, 10:19 AM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பின்னப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. நடிகரின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த்துக்கு போதை மருந்து அதிக அளவில் கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ரியா மீது போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது சகோதரர் மற்றும் மேனேஜர், வேலையாள் ஆகியோரும் இதில் கைது செய்யப்பட்டனர். ரியாவுடன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் போதை மருந்து தொடர்பில் இருக்கும் பிற நடிகர், நடிகை தயாரிப்பாளர் என 15க்கும் மேற்பட்டவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் ஆகியோர் பெயர்களை அளித்திருக்கிறார். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தன்னைப்பற்றி மீடியாக்களில் ஆதாரம் எதுவும் இல்லாமல் தவறான தகவல்கள் வெளியிடப்படுகிறது அதற்குத் தடை விதிக்க வேண்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்த ஷ்ரத்தா கபூர் மீதும் போதை மருந்து விவகாரத்தில் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே போதை மருந்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. பார்ட்டி ஒன்றில் தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், ஷாகித் கபூர் போதை மருந்து பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியானது, அதை சுஷாந்த் ரசிகர்கள் ஷேஷ் டேக் செய்து வைரலாக்கி வருகின்றனர். தீபிகா மீது புகார் எழுந்துள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையடுத்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்ட்டி நடந்த ஒட்டலில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.தீபிகா படுகோன் தனது மேனேஜர் கிரிஷ்மா பிரகாஷிடம்போது மருந்து கேட்டு வாட்ஸ் அப் செய்ததாகவும் இதையடுத்து கரிஷ்மாவுக்கு போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பி உள்ளனர். தீபிகா படுகோனே இந்தியில் பிரபல நடிகை ஆவார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த மோஷன் அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் ரஜினியுடம் நடித்திருக்கிறார். அடுத்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார். தீபிகா பரபரப்பே அடங்காத நிலையில் அடுத்து நடிகை தியா மிர்சா பெயரும் இந்த விவகாரத்தில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை தியா மிர்சா மறுத்திருக்கிறார். தான் ஒருபோதும் போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியது இல்லை என டிவிட்டர் மெசேஜில் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் போதை விவகாரம் கன்னித்தீவு கதை போல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News