40 நாளில் படம் முடித்து 400 கிராம் தங்கம் பரிசளித்த ஹீரோ..

by Chandru, Nov 8, 2020, 12:31 PM IST

கடந்த ஒன்றரை வருடமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் நடிகர் சிம்பு. பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது.கொரோனா ஊரடங்கு தளர்வில் தனது உடல் எடையை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் சிம்பு. அதற்கு நல்லபலன் கிடைத்தது. உடல் குறைப்பதற்காக அவர் உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டார். தினமும் 5 பிரியாணி சாப்பிட்டு வந்த சிம்பு உடல் எடையை குறைப்பதற்காக பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தினார். புதிய படங்களில் நடிக்க ஸ்கிரிப்ட் கேட்டு வந்த சிம்பு இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கிராமத்து பின்னணியிலான ஸ்கிரிப்ட் மிகவும் பிடிக்கவே நடிக்க ஒப்புக்கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. திண்டுக்கல் பகுதியில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டார்.

படத்திற்கு ஈஸ்வரன் என பெயரிட்டிருக்கிறது. வயலில் நிற்கும் சிம்பு நாகப் பாம்பை கையில் பிடித்தபடி அளித்திருக்கும் போஸ் ஒரு நிமிடம் ரசிகர்களை திணற வைத்தது. இப்படம் பொங்கல் தினத்தில் வரும் என இயக்குனர் அறிவித்திருக்கிறார். இப்படத்துக்காக பாம்பு பிடிப்பதுபோல் சிம்பு நடித்த காட்சி வம்பாக முடிந்திருக்கிறது. அதற்கான காட்சிகள் லீக் ஆனதில் காட்டு பகுதியில் இரண்டு பேர்களுடன் பாம்பு பிடிக்கச் செல்லும் சிம்பு மரத்தின் மீதிருக்கும் பாம்பை பிடித்து அதை சாக்கு பையில் போடும் காட்சி வெளியாகி வைரலானது. அதைக் கண்ட விலங்கு ஆர்வலர் ஒருவர், வனவிலங்கு சட்டப்படி விலங்குகளை துன்புறுத்தக் கூடாது ஆனால் சிம்பு பாம்பு ஒன்றை பிடித்து அதற்கு தொல்லை கொடுத்திருப்பதாக வனவிலங்கு துறையில் புகார் செய்திருப்பதாக கூறினார். இதுகுறித்து வனத்துறை அதிகாரி பட இயக்குனர் சுசீந்திரனை அழைத்து விசாரித்ததில் சிம்பு பிடித்தது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது. சில கிராபிக்ஸ் காட்சிகள் லீக் ஆனதில் தவறாக புரிந்துகொள்ளப் பட்டது. நிஜபாம்பை பயன் படுத்தவில்லை என்று விளக்கம் அளித்தார்.

மின்னல் வேகத்தில் நடந்த ஈஸ்வரன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. மொத்தம் 40 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்திருப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் உடல் இளைத்து சிம்பு புதிய தோற்றத்தில் நடித்திருப்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சென்ற மாதம் துவங்கிய ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடிகர் சிலம்பரசன் ஈஸ்வரன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார் சிம்பு. இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் தலா ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்து இன்ப அதிர்ச்சி யை அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை