திரைப்பட வாய்ப்புக்காக பிளாஸ்டிக் சுர்ஜரி மூலம் முகத்தை மாற்றி கொண்ட பிரபல நடிகை..!

by Logeswari, Nov 9, 2020, 20:09 PM IST

தமிழில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் மூலம் பெரும் புகழ் பெற்றவர் சோனியா அகர்வால். அதன் பின் ஸ்ரீகாந்த் போன்ற முக்கிய நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி கன்னியாக ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடி இளைஞர்கள் மனதை கவர்ந்தவர். இவர் அதிக படங்கள் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படம் நடிப்பதில் இருந்து சற்று தள்ளி இருந்தார். சில ஆண்டுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் ஒரு கருத்து வேறுப்பாட்டில் இருவரின் முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு சினிமாவில் கிடைக்கின்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வில்லை. இதனால் பல நடிகைகள் கையில் எடுத்த ஆயுதத்தை இவரும் எடுத்துயுள்ளார். சினிமா வாய்ப்பு கிடைக்க இவரின் முகத்தை பிளாஸ்டிக் சுர்ஜரி செய்து தனது தோற்றத்தையே முழுமையாக மாற்றியுள்ளார். இவரை பார்க்கும் பொழுது சோனியா அகர்வாலா?? என்பது சந்தேகமாக உள்ளது. இவரது புது தோற்றத்தை அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை குறித்து பல ரசிகர்கள் பல விதமான விமர்சங்களை போட்டு தாக்கி வருகின்றனர். சிலர் வாழ்த்துகூறியும் வருகின்றனர்.

You'r reading திரைப்பட வாய்ப்புக்காக பிளாஸ்டிக் சுர்ஜரி மூலம் முகத்தை மாற்றி கொண்ட பிரபல நடிகை..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை