ஒடிடியில் வெளியான விஜய் பட இயக்குனர் புதியபடம்..

by Chandru, Nov 24, 2020, 13:50 PM IST

நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கியவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். ஆர்யா, சத்யராஜ், நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்திருந்தனர். இப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து அவரது கை கோலிவுட்டில் ஓங்கியது. விஜய் படங்களை இயக்கிய நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார். அட்லி தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார் ஏற்கனவே சங்கி புங்கிலி கதவ திற என்ற படத்தை தயாரித்தார். அடுத்து 'அந்தகாரம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

இதில் அர்ஜூன்தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் கைதி படத்தில் வில்லனாக நடித்ததுடன் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார். அந்தகாரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தர்போது நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிவுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ், கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், 'ராஜா ராணி'யில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான ஸ்கிரிப்ட்டுடன் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை சுசி சித்தார்த் இயக்க. திரு அமுதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்