சீதாவை ராவணன் கடத்தியது பற்றி பேசிய பிரபல நடிகருக்கு எதிர்ப்பு.. பல்டி அடித்த பிரபலம்..

by Chandru, Dec 7, 2020, 10:38 AM IST

சினிமாவில் சொல்லப்படும் சில கருத்துக்களுக்குக் கடந்த சில காலமாகவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. துப்பாக்கி, சர்க்கார், தெறி போன்ற படங்களில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் திரௌபதி படத்துக்கு எதிர்ப்பு வந்தது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் முன்பு எதிர்ப்பு கிளம்பியது.தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ஆர் ஆர் ஆர் படத்தில் வெளியான டீஸரில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி அணிந்ததற்கு ஆதிவாசிகளும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் கதாபாத்திரம் பற்றி கருத்துச் சொன்ன நடிகருக்கு எதிர்ப்பு கிளம்பியது.பிரபாஸ் நடிக்கும் புதியபடம் ஆதிபுருஷ். பல கோடி செலவில் இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஓம் ரவுட் இயக்குகிறார். இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கி 2022ம் ஆண்டு படம் திரையிட உள்ளதாகப் படக் குழு அறிவித்துள்ளது. ராமாயணத்தைப் பின்னணியாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக சயீப் அலிகான் நடிக்கிறார்.

சமீபத்தில் தனது கதாபாத்திரம் பற்றி சயீப் பேட்டி அளித்தார். அப்போது,ராவணன் சீதையை கடத்தியதிலும் ராமருடன் போரிட்டதிலும் உள்ள நியாயத்தை எனது கதாபாத்திரம் வெளிப்படும் என குறிப்பிட்டார் . இது சர்ச்சையானது. ராவணன் சீதையைக் கடத்தியது தவறு அதில் நியாயம் எதுவும் கிடையாது என்று அரசியல் வாதிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது கருத்தை சயீப் உடனடியாக வாபஸ் பெற்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.நான் எல்லோரிடமும் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் நான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்.

ராமர்தான் எப்போதும் நியாயத்துக்கும் நேர்மைக்கும் உதாரணம். அவர் எனது ஹீரோ. ஆதிபுருஷ் படம் தீயசக்தியைத் தோற்கடித்த வெற்றியைக் கொண்டாடும் படம். இதில் மொத்த படக் குழுவும் முழு கவனம் செலுத்தி அதனை உருவாக்க பணியாற்றி வருகிறார்கள் என்றார். இத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து கே ஜி எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் என்ற ஆக்‌ஷன் படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு ஆதி புருஷ் படத்தில் நடிக்க உள்ளார்.

You'r reading சீதாவை ராவணன் கடத்தியது பற்றி பேசிய பிரபல நடிகருக்கு எதிர்ப்பு.. பல்டி அடித்த பிரபலம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை