ராஷிகன்னாவுக்காக பெற்றோர் செய்த ஸ்பெஷல் நிகழ்ச்சி..

by Chandru, Dec 7, 2020, 10:46 AM IST

நடிகை ராஷி கன்னா தமிழில் மெல்ல மெல்லக் காலூன்றி வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பின்னர் விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் நடித் தார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடியால் அப்படத்திலிருந்து விலகினார். அந்த வாய்ப்பு ராஷி கன்னாவுக்கு சென்றது. தன்னுடைய வாய்ப்பு ராஷி கன்னாவுக்குச் சென்றதை அரிந்து அவருக்கும் படக் குழுவுக்கும் அதிதி வாழ்த்து தெரிவித்து பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

ராசி கன்னா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பள்ளிக்குச் சென்று மரம் நட்டார். பிறந்த நாள் விழாவுக்கு நண்பர்கள், தோழிகள் யாரையும் அவர் அழைக்கவில்லை. அதற்குப் பதிலாக அவரது பெற்றோர் வேறு ஸ்பெஷல் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக ராஷிபெற்றோருக்கு நன்றி சொன்னார்.

இதுகுறித்து ராஷிகன்னா கூறியதாவது: தாய் போன்ற இந்த பூமிதான் நமது முதாதையர். அதைக் காக்க வேண்டியது நம் பொறுப்பு. மரங்கள் நட்டு பசுமை மூலமே பூமியைக் காக்க நாம் செய்யும் பயனுள்ள காரியமாக இருக்கும். இது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். என் பிறந்த நாளில் நான் மரம் நட்டது சந்தோஷமாக உள்ளது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் இந்த பணியை நான் செய்வேன் என்றார்.கொரோனா காலகட்டமாக இருப்பதால் பிறந்த நாளுக்கு யாரையும் ராஷி கன்னா அழைக்காத நிலையில் அவரது பெற்றோர் வெர்சுவல் சந்திப்பு எனப்படும் இணைய தளம் மூலம் ராஷியின் நண்பர்கள், தோழிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுடன் ராஷி உரையாடினார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். எதிர்பாராத இந்த சந்திப்பால் ராஷி நெகிழ்ச்சி அடைந்தார். இதற்கு ஏற்பாடு செய்து தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார் .

அவர் கூறும்போது.இந்த கொண்டாட்டத்தை நான் மிகவும் ரசித்தேன். கொரோனா காலகட்டமானதால் யாரையும் நான் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்க முடியவில்லை. என் பெற்றோர் அவர்களை வீடியோ முலம் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது உண்மையிலேயே உணர்ச்சிகரமாக அமைந்தது. என் பெற்றோருக்கும், வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி என்றார்.ராஷி கன்னா தமிழில் அரண்மனை 3, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் கவன் செலுத்திக்கொண்டிருந்த ராஷி கன்ன தற்போது தனது கவனத்தைத் தமிழில் செலுத்த ஆரப்பித்திருக்கிறார். தமிழ் பேசவும் கற்று வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை