மணமகள் அழைப்பு விழாவில் அம்மாவின் கல்யாண பட்டு சேலை கட்டிவந்த நடிகை..

Advertisement

கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் திருமணங்கள் கொரோனா அச்சம் மற்றும் லாக்டவுன் விதிமுறைகளால் எளிமையாக அதிக கூட்டம் சேர்க்காமல் குடும்ப உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். நடிகை காஜல் அகர்வால் , மம்மூட்டியுடன் கடந்த ஆண்டு மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலன், மற்றும் நடிகை மியா ஜார்ஜ், நடிகர்கள் நிதின், ராணா இன்னும் பலருக்கு திருமணம் நடந்தது. தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த திருமணம் தடபுடலாக நடக்கிறது. லாக்டவுன் தளர்வில் பெரிய அளவில் நடக்கும் திருமணமாக இது அமைந்திருக்கிறது. ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள ஓபாராய் பேலஸ் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடக்கவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் செய்ய கடந்த வாரமே நிஹாரிகா ராஜஸ்தான் புறப்பட்டு சென்றார். தொழில் அதிபர் வெங்கட்ட சைதன்யாவை அவர் மணக்க உள்ளார். முன்னதாகவே திருமண கொண்டாட்டம் அவர்கள் குடும்பத்தில் தொடங்கிவிட்டது. குடும்பத்தினர் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் பாட்டு பாட பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு நடனம் ஆட உள்ளார். திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், வருண் தேஜ், அல்லு அர்ஜூன், அல்லு சிரீஷ், சாய் தரம் தேஜ், வைஷ்னவ் தேஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நிஹாரிகாவுக்கு உறவின் முறையினர் தண்ணீர் ஊற்றும் சடங்கு, சந்தனம் வைக்கும் சடங்கு என பல சடங்கு முறைகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருமணத்தையொட்டி பல நட்சத்திரங்கள் உதய்பூர் சென்றுள்ளனர். உதய்பூரில் நடந்த நிச்சயார்த்த மணமகள் அழைப்பு விழாவில் நிஹாரிகா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ப்ளு நிற சேலையில் சரிகை பார்டர் போட்ட பட்டு சேலையையும் கோவில் நகைகள்போல் டிசைனில் தங்க நகைகளும் அணிந்து வந்தார். அது அவரது தாயார் திருமணத்தின்போது அணிந்திருந்த சேலை. அம்மா செண்டி மெண்ட்டுடன் நிஹாரிகா சேலை அணிந்தது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிஹாரிகாவை அந்த சேலையில் பார்த்த மாப்பிள்ளை சைதன்யா அவர் அருகில் ஓடிச்சென்று அமர்ந்து செல்ஃபி படம் எடுத்து அதை நெட்டில் பகிர்ந்தார். இந்த படங்கள் வைரலானது. நிஹாரிகா திருமணம் 9ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது இரவு 8.30 மணிக்கு திருமண வரவேற்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>