கொரோனா பரவல் 8 மாதம் கடந்தும் ஆகியும் முற்றிலும் நீங்கிய பாடில்லை. இன்னனும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். திரையுலக பிரபலங்கள் நடிகர்கள் விஷால் கருணாஸ், நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலி. இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று அதன் பிறகு குணம் அடைந்தனர். தெலுங்கில் நடிகர் டாக்டர் ராஜசேகர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி கவலைக்கிடமான நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.
அவரது மனைவி ஜீவிதா, இரண்டு மகள்களும் கொரோனாவுக்குள்ளாகினர். அவர்களும் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். இந்நிலையில் மகேஷ்பாபு ஜோடியாக 1நேனொக டெய்னே தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்த கிரித்தி சனோன் கடந்த மாதம் கொரோனா தொற்றுகுள்ளானார். சண்டிகரில் நடந்த இந்தி படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். படப்பிடிப்பில் இருந்த சில நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிரித்திக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் மும்பை வந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார்.
சுமார் 4 வாரம் அவர் தனிமையிலிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா நெகடிவ் என தெரிய வந்தது. இதுபற்றி அவர் தனது இணையதள பக்கத்தில் கூறும் போது, கடைசியாக நான் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து விட்டேன் என்பதை சொல்ல மகிழ்ச்சி அடைகிறேன். மும்பை மாநகராட்சி அதிகாரிகள், மும்பை கார்ப்பரேஷன் உதவி கமிஷனர் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் குணம் அடைய வாழ்த்து சொன்ன ரசிகர்கள், அன்பானவர்களுக்கும் எனது நன்றி என தெரிவித்திருக்கிறார். கிரித்தி சனோன் தற்போது மிமி என்ற இந்தி படத்தில் நடிப்பதுடன் பிரபாஸ் நடிக்க பல மொழியில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.