தளபதி படத்துக்கு டிக்கெட் புக்கிங் திறப்பு.. பொங்கலுக்கு முதல் நாள் மாஸ்டர்..

by Chandru, Dec 26, 2020, 10:09 AM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. கொரோனா தளர்விலும் பல ஷூட்டிங், போஸ்ட் புரடக்‌ஷன் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் திறக்கக் கேட்டு அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதிக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளனர். இதற்கிடையில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில். 100 சதவீத டிக்கெட் அனுமதி, பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டால் அது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அரசு தரப்பிலிருந்த கூறப்பட்ட இந்த தகவலையடுத்து மாஸ்டர் படத்தைப் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

பொங்கலுக்கு முதல்நாள் 13ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களை மாஸ்டர் படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். சில தியேட்டர்களில் டிக்கெட் ரிசர்வேஷனும் நடக்கிறது. பெரும்பாலான தியேட்டர்களில் ஜனவரி 1ம் தேதி முதல் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்க உள்ளது. மாஸ்டர் படம் தமிழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம். கன்னடம். இந்தி என எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. விஜய் நடித்த படம் எல்லா மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு வருவது குறைந்துள்ளதால் அவர்களை மாஸ்டர் படம் தியேட்டருக்கு திரும்ப அழைத்து வரும் என்று தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன் பிறகு தியேட்டர்கள் நிலைமை சீராகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை