நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகத் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கில் அவர் தனது உடல் எடையைக் குறைக்கக் கடுமையான உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 5 பிரியாணி சாப்பிட்டு வந்தார் அதை முதலில் நிறுத்தினார். பின்னர் பயிற்சியாளர் வழிகாட்டுதல் படி உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு 30 கிலோ எடை குறைத்து ஒல்லி தோற்றத்துக்கு மாறினார். ஊரடங்கின்போது கதைகள் கேட்டு வந்த சிம்பு.
இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். புதிய தோற்றத்துடன் அப்படத்தில் நடித்தார். ஈஸ்வரன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்தது, தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சிம்பு நடித்த படத்தை முடித்துக்கொடுத்தார். இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிம்பு மீது முன்னதாக படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பில் சிம்பு நடித்த போதும் படப்பிடிப்பிற்குச் சரியாகவருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அங்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் சென்று சிம்பு சரியான நேரத்துக்கு வந்து நடித்துக்கொடுப்பார் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப் பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்புகள் தொடங்கியவுடன் ஈஸ்வரன் படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்று நடித்தார். அதை முடித்துக்கொடுத்து விட்டு மாநாடு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். சிம்பு தொடர்ச்சியாகப் படப் பிடிப்பில் கலந்து கொண்டதை திரையுலகினர் பாராட்டினர். சிம்புவுக்கு அவரது தாயார் சொகுசு கார் வாங்கி பரிசளித்தார்.தற்போது மாநாடு படப்பிடிப்பு ஏற்காட்டில் நடக்கிறது. சிம்பு கடந்த சில ஆண்டாகவே ஆன்மிகத்தில் அதிக ஆர்வமாக உள்ளார். 2 வருடத்துக்கு முன் ரஜினிகாந்த் போல் இமயமலை சென்று தியானம் செய்தார். பிறகு சபரிமலை சென்று வந்தார்.
ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். தற்போது ஏற்காடு மாநாடு படப் பிடிப்பில் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டுச் சென்றார் சிம்பு. அந்த படங்கள் நெட்டில் வலம் வருகின்றன.சிம்பு அடுத்து பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது கன்னடபடம் முஃப்தி ரிமேக் ஆகும் இதில் மற்றொரு ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளார். அதேபோல் போடா போடி 2ம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.