ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் படம் ஏற்படுத்தும் பரபரப்பு..

by Chandru, Jan 3, 2021, 17:42 PM IST

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் படத்தை தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அப்போதும் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. கோடிகளில் செலவு செய்து எடுத்த படம் 50 சதவீத டிக்கெட் அனுமதி என்பதால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வது என்று படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

சமீபத்தில் பேட்டி அளித்த செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாஸ்டர் படத்துக்குச் சிறப்புக் காட்சிகள் நடத்தக் கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கப்படும், தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதிக்கும் கோரிக்கை வைத்தால் ஆலோசித்து நல்ல முடிவு சொல்லப்படும் என்றார்.இது தொடர்பாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை வைத்தார். 100 சதவீத டிக்கெட் அனுமதி மற்றும் சிறப்புக் காட்சிகளுக்கு விஜய் முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டார். இதனை மறுநாள் முதல்வர் பொதுக்கூட்டத்தில் உறுதிபடுத்தினார்.

இதையடுத்து பொங்கலையொட்டி சிறப்புக் காட்சிகள் மற்றும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு அரசு உத்தரவிட வாய்ப்புள்ளதாகக் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். தற்போது விஜய்யின் மாஸ்டர் பொங்கலையொட்டி 13ம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ் தவிரத் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் படம் வெளியாகிறது. இத்தனை மொழிகளில் ஒரே நாளில் விஜய் படம் வெளியாவது இதுதான் முதல்முறை. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் மாஸ்டர் வெளியாகிறது. ஆஸ்திரேலியாவில் இப்படம் 68க்கும் அதிகமாகத் திரை அரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் படம் ஆஸ்திரேலியாவில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது முதல்முறை. அதற்கான தியேட்டர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை