100 சதவீத தியேட்டர் டிக்கெட் திறப்புக்கு பிரபல நடிகர் எதிர்ப்பு..

by Chandru, Jan 5, 2021, 16:17 PM IST

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. ஊரடங்கு தளர்வில் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட பல் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் புதிய படங்கள் வெளியிட முடியாமல் முடங்கியது. சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் பெரிய படங்களான மாஸ்டர் போன்றவை ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கோரிக்கை வைத்தார். அதே போல் நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு போன்றவர்களும் கோரிக்கை வைத்தனர். திரையுலகினரின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி நேற்று அனுமதி அளித்தது. இது தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என், முரளி ராமசாமி, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து பொங்கல் தினத்தையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அதேபோல் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 100 சதவிகித ஆக்கிரமிப்புடன் தியேட்டர்களைத் திறந்ததற்காக தமிழக அரசு ஒரே நேரத்தில் மக்களிடமிருந்து பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 100 சதவிகித ஆக்கிரமிப்புடன் தியேட்டர்களைத் திறக்கும் நாட்டின் முதல் மாநிலம் இதுவாகும். பல பிரபலங்கள் முழு திறனை அனுமதித்ததற்காக அரசாங்கத்தை பாராட்டியதால், ஒரு சிலர் வேறுவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் 50 சதவிகித ஆக்கிரமிப்பு அர்த்தமுள்ளதாகும் நடிகர் ஒருவராக அரவிந்த் சுவாமி கூறியுள்ளார். அரவிந்த் சுவாமி ஒரு டிவீட் மெசேஜை பகிர்ந்தார் அதில், இந்த நேரத்தில் 100 சதவிகிதத்தை விட 50 சதவீதம் சிறந்தது என்று கூறினார். அரவிந்த்சாமியின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசன் டி.ஆரின் ஈஸ்வரன் பொங்கலுக்காக வெளியிடப்பட உள்ளது என்பது குறிபிடத்தக்கது. அரவிந்த் சுவாமி தற்போது கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவியில் நடித்து வருகிறார். இதில் எம்ஜிஆர் வேடமேற்றிருக்கிறார் அரவிந்த்சாமி. இப்படத்தை விஜய் இயக்குகிறார். பிரகாஷ் ராஜ், பூர்ணா, மது, நாசர், சமுத்திரகனி இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

You'r reading 100 சதவீத தியேட்டர் டிக்கெட் திறப்புக்கு பிரபல நடிகர் எதிர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை